Department of Tamil
ஆய்வுப் பணி
தமிழ் மொழிக்கும் ஆராய்ச்சிக்கும் பெருமைசேர்க்கும் வகையில் தமிழ்த்துறை 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பலகருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் நடத்திவருகிறது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு பல்துறைநோக்கில் தமிழ் இலக்கியம் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கமும், 2015 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துடன் இணைந்து சங்க இலக்கியம் காட்டும் பக்தி என்னும் தேசியக் கருத்தரங்கமும் 2016 ஆம் ஆண்டு நவீனக் கோட்பாடுகளும் தமிழ் இலக்கியமும் எனும் கருத்தரங்கமும் 2018 ஆம் ஆண்டு பன்முகநோக்கில் பதினெண் கீழக்கணக்கு நூல்கள் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தியுள்ளது.
தரவரிசை
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பொதுத்தேர்வில் 2007 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்த்துறை மாணவர்கள் தரவரிசையில் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றனர்.
தமிழ்த்துறை இன்று பல அமைப்புகள்,நிறுவனங்களுடன் இணைந்து பல தொடர்நிகழ்வுகளை நிகழ்த்தி மாணவர்களின் முன்னேற்றத்துக்கு துணைநிற்கிறது. மேலும் போட்டித்தேர்வுகளுக்குப்பயிற்சியையும், பயிற்சிஏடுகளையும் வழங்கி மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கும் வழிவகை செய்துவருகிறது.
பாடப்பிரிவுகள்
1. B.A., Tamil
2. M.A., Tamil
3. M.Phil., Tamil
4. Ph.D., Tamil